scorecardresearch

மாடிப் படி ஏறுவதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா? நிபுணர்கள் கருத்து என்ன ?

சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற வாழ்வு முறை சார்ந்த நோய்களுக்கு அதிக உடல் எடைதான் காரணம். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின்படி, ஒரு நாளைக்கு சாதாரணமாக 150 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உடல் பயிற்சி செய்ய வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிரமாக உடல் பயிற்சி செய்ய வேண்டும். சில வாரங்கள் இவை இரண்டையும் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் நடைபெற்ற சில ஆய்வுகளில் படி ஏறுவது  ஒரு வகை உடல் பயிற்சியாக கருதப்படுகிறது. வேகமாக படி ஏறுவது அல்லது மிதமான வேகத்தில் படி ஏறுவதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.

சாதாரண மாடிப்படிகளில் ஏறும்போது, நமது தசைகள் வலு இழப்பதை கட்டுபடுத்தும், வயதாகும்போது உடலில் ஏற்படும் தளர்ச்சியை கட்டுப்படுத்தும்.  குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே மாடிப்படி ஏறுவதால், மெட்டபாலிக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இது என்டோர்பின்ஸ்  சுரக்க உதவுகிறது., இதனால் நமக்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது.

இந்நிலையில்  சிலருக்கு இந்த மாடி படிகட்டுகள் ஏறுவதால், உடல் கொழுப்பு குறைந்து, சர்க்கரை நோய்யும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. சிலருக்கு இதய நோய்  ஏற்படாமல் தடுக்கிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு 35 நிமிடங்கள் வரை மாடிப் படிகள் ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்தால் மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாடிப் படிகள் ஏறும்போது, காயமடைய வாய்ப்பு இருப்பதால், 40 வயதுக்கு மேலே இருப்பவர்கள் இதை தவிப்பது நல்லது. மேலும் அதிவேகமாக முதலிலேயே ஏறுவதை தவிர்க்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Can stair climbing control blood sugar reduce heart attack risk

Best of Express