Advertisment

காவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா? நீதிபதி கிருபாகரன் கண்டனம்!

காவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சென்று சந்திப்பது நியாயமா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
justice kirubakaran - chennai high court - neet exam

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறை தவறாக பயன்படுத்தபடுவதாகவும், காவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சென்று சந்திப்பது நியாயமா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில், காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் காவல்துறை உதவி ஐஜி மகேஸ்வரன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டாது. அதில் தமிழகத்தில் ஆர்டர்லி என்ற முறையே இல்லை. அது முற்றிலுமாக ஒழிக்கபட்டு விட்டது. ஏற்கனவே இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உறுதியுடன் பின்பற்றபட்டு விருகின்றேம். இருப்பினும் ஆன் - டூட்டி அடிப்படையில் உயர் அதிகாரிகள் வீடுகளில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தபடுவதாகவும் அவர்கள் பணியை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவது இல்லை. ஆர்டர்லியாக யாரும் பணியமர்த்தபடுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் இருந்து 8158 ராஜினாமா செய்துள்ளனர். முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக 520 பணிநீக்கம் செய்யபட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் 296 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாலை விபத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இறப்பு 3032 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆர்டர்லி முறை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆணையம் அமைப்பது தேவையில்லை என்பது குறித்து விரிவாக வாதிடுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, காவலர்களின் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், உயரதிகாரிகளுக்கு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள காவலர்களை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், மணல், கனிம வளங்களை கொள்கையடிக்கும் கும்பல்களிடம் இருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை நினைவு படுத்தினார்.

விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், காவல்துறையில் இருப்பவர்கள் காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினாலும், இன்னும் அந்த நடைமுறை அமலில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ராமநாதபுரத்தில் காவலரை தாக்கிய ரவுடியை தமிழக அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் கூறுயதாக செய்திகள் வருகின்றன. இது காவல் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என கண்டனம் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நடவடிக்கை மூலம் நேர்மையான அதிகாரிகள் பணி செய்யவே தயங்கும் நிலை ஏற்படும் என்றார்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல் துறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படவே நிர்பந்தம் செய்வதாகவும் நீதிபதி கிருபாகரன் குற்றம்சாட்டினார்.

குற்றவாளியை காவல்துறையினர் தாக்கினால் அதை மனித உரிமை மீறல் என்கிறோம். ஒரு ரவுடியால் காவல்துறையினர் தாக்கப்படும் போது மனித உரிமை மீறல் கிடையாது. மனித உரிமை ஆர்வலர்கள் எங்கே சென்றார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

காவல்துறை அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு உதவியாளர்களை தேர்வு செய்ய வேண்டுமே தவிர காவலர்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சமூகத்திற்காக என்ன செய்தார்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக காவல் துறையோ அல்லது வழக்கறிஞரோ எந்த புகாரும் அளிக்காதது அவமானகரமானது என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

பின்னர் குழு அமைப்பது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 26 ம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

Chennai High Court Justice Kirubakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment