‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’... விஜயகாந்த் பிறந்த நாள்; அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

"மறைந்தாலும் அவர் கொடுத்த கொடையாலும், மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடிகர் சங்கத் தலைவராக சிக்கலில் தவித்த சங்கத்தை மீட்ட சாதனையாளர்." என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

"மறைந்தாலும் அவர் கொடுத்த கொடையாலும், மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடிகர் சங்கத் தலைவராக சிக்கலில் தவித்த சங்கத்தை மீட்ட சாதனையாளர்." என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Captain Vijayakanth birth anniversary political leaders celebrities wishes Tamil News

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மறைந்த தே.மு.தி.க நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நயினார் நாகேந்திரன் வாழ்த்து 

Advertisment

இந்நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தே.மு.தி.க நிறுவனர், பத்மபூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் அமரர் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மாபெரும் கொடையாளர். கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர். 

மறைந்தாலும் அவர் கொடுத்த கொடையாலும், மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடிகர் சங்கத் தலைவராக சிக்கலில் தவித்த சங்கத்தை மீட்ட சாதனையாளர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட செயல்பட்ட திறமையாளர். இன்றைய நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம்." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

அண்ணாமலை வாழ்த்து 

Advertisment
Advertisements

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "தே.மு.தி.க நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.

கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்." என்று அவர் கூறியுள்ளார். 

செல்வப்பெருந்தகை வாழ்த்து 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள். தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.

அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும். இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்." என்று கூறியுள்ளார். 

Vijayakanth Dmdk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: