அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
விஜய்காந்த் தனது மனைவி பிரேமலதாவை 1990ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கரம்பிடித்தார். இருவரும் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளை ஒவ்வொரு வருடமும் தனது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவார்கள். கட்சி தொண்டர்களும் காலை முதலே இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேம லதா அமெரிக்காவில் உள்ளதால் கட்சித் தொண்டர்கள் வாழ்த்துக்களை இணையதளம் மூலம் தெரிவித்து வந்தனர்.
அமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த் - பிரேம லதா
கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மனைவி பிரேமலதாவும் உடன் சென்றார். இருப்பினும் கிருஸ்துமஸ் தினத்தன்று தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் அவர் வெளியிட்டார்.
January 2019
இந்நிலையில் தனது திருமண நாளை அவர் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.