சென்னையின், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிழிந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் சகோதரர்கள். அதிமுகவில் இருவரும் உள்ளனர். தொழிலதிபராக இருக்கும் இவர்கள், இவர்களது பொக்லைன் இயந்திரத்தை பழுது பார்த்துவிட்டு, வண்டலூர்- மீஞ்சூர் சாலையில் வந்துகொண்டிருந்தனர்.
காரில் இவர்களுடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். கார் கட்டுபாட்டை இழந்ததால், அங்கிருக்கும் இரும்பு தடுப்பு சுவர்களில் மோதி, பள்ளத்தினுள் கழுந்தது, இந்த விபத்தில் சகோதர்கள் இருவரும், அவர்களுடன் வந்த சுதாகர் என்பவரும் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.