சென்னையில், முக்கிய சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, சென்னை மத்திய கைலாஷில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது. இன்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக, இந்தப் பள்ளத்திற்குள் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தக் காரில் 4 பேர் பயணித்த நிலையில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளத்தில் இருந்து காரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தின் காரணமாக சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.