திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை சேர்ந்தவர் துளசிமணி, பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை துளசிமணி தன் சொந்த வேலை காரணமாக கோவை சென்று விட்டு அவிநாசி சாலை வழியாக காரணம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காரை ஓட்டுநர் நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சூலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் இன்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு காரை சாலையோரம் நிறுத்தினார்.
உடனடியாக காரில் பயணித்த இருவரும் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இஞ்சினில் பற்றிய தீ கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரபரப்பான கோவை - அவிநாசி சாலையில் திடீரென கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“