/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-09-at-10.01.40.jpeg)
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (18) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓனம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/308e4eec-8414-4f53-b166-2fc8bbfb6b6e.jpg)
இதனை அடுத்து இரவு அங்கு தங்கி விட்டு காலையில் வடவள்ளி உள்ள தனது வீட்டிற்கு நண்பர்களுடன் ரோஷன் காரை ஓட்டி வந்துள்ளார்.அப்போது போளுவம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமுள்ள 120"அடி ஆளமுள்ள கிணற்றில் இரும்பு தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் பாய்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/6f95b578-b0aa-42ed-bd19-56eea742bd3c.jpg)
இதில் காரை ஓட்டி வந்த ரோஷன் என்பவர் மட்டும் காரின் கதவை திறந்து வெளியே வந்து விட்டார்.இதில் அவருடன் பயணம் செய்த கல்லூரி நண்பர்களான ஆதர்ஷ்,(18),ரவி(18)' நந்தனன் (18),ஆகியோர் காருடன் நீரில் மூழ்கியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-09-at-10.01.40.jpeg)
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கியுள்ள மூன்று பேரை கிரைன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நந்தனன் 18 வயது உடல் மீட்கப்பட்டது. காரில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்
செய்தி: ரகுமான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.