சென்னை பார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்து காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பார்முலா கார் பந்தயத்துக்காக கடந்த 2 நாட்களாக, தீவுத்திடல் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பார்முலா கார் பந்தயம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் போட்டி தொடங்குவது தாமதமானது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் அதிக போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
ஓமந்தூர் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவகுமார் நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“