மதுரையில், பென்ஸ் காரை சர்வீஸ் செய்து தருவதாகவும், இன்னோவா காரில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகிறேன் என கூறி போலி ஆவணங்களை பயன்படுத்தி 2 சொகுசு கார்களை விற்பனை செய்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி, TNHB காலனி பகுதியைச் சேர்ந்த சித்தமருத்துவர் முத்துராஜா. இவர் அதே பகுதியில் ஆண்டவர் குருகுலம் ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், மனைவி கடந்த 2016-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து, 2023-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு முத்துராஜாவும் உயிரிழந்தார்.
இந்நிலையில், முத்துராஜாவின் மூத்த மகனான முத்துகணேஷ் (19) தனது தந்தை உயிரிழந்த பின் அவருக்கு சொந்தமான சொத்துக்களை பராமரித்து வந்துள்ளார். அப்போது, குருகுலத்தை வாடகைக்கு விட முடிவு செய்த முத்துகணேஷிடம் வாடை தொடர்பாக கேட்டு வந்த மதுரை மேலஅனுப்பானடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளங்கோ (25), பெற்றோர்கள் இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டு அன்பாக பழகி உள்ளார்./blob:https://web.whatsapp.com/550da595-8cef-4655-bcd8-c9ec7994e680)
/indian-express-tamil/media/media_files/2025/06/05/5WYmPjy7MrDIkxOHQZxk.jpg)
தொடர்ந்து, மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள முத்துகணேசனின் தந்தைக்கு சொந்தமான இடத்தில் BENZ, INNOVA ஆகிய 2 சொகுசு கார்கள் இருப்பதை அறிந்து கொண்டு, 2 சொகுசு கார்களும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மரிப்புள்ளது என இளங்கோவனிடம் முத்துகணேஷ் கூறியுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்ஸ் (BENZ) சர்வீஸ் செய்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நாட்களாக காரை தராமல் இழுத்தடித்த நிலையில், இளங்கோவனை தொடர்பு கொண்டு தனது காரை கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும், சர்வீஸ் செய்து கொண்டிருப்பதாக கூறிய இளங்கோ, விரைவில் தந்துவிடுகிறேன் என கூறிவந்துள்ளார். 2 ஆண்டுகளாகியும் காரை விற்பனை செய்து தருவதாகக் கூறி பணம் தராமல் இழுத்தடித்து 4 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்.
இதனிடையே, இளங்கோவனின் நண்பனான விரகனூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் முத்துகணேஷனிடம் INNOVA கார் ஒன்றை நட்பு ரீதியாக வாங்கிச் சென்று குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று விட்டு வருகிறேன் என கூறி வாங்கிச்சென்று, தனக்கே தெரியாமல் தனது தந்தை இறந்த நிலையில், அவரது பெயரில் இருந்த காரை மோசடியாக எந்தவித ஆவண்மும் இல்லாமலும், ஒப்புதல் இல்லாமல் பெயர் மாற்றம் செய்து காரை ஸ்ரீராம் தனியார் பைனான்ஸ்-ல் விற்பனை செய்துவிட்டு எனது வீட்டில் வந்து நிறுத்திசென்றனர்.
தனது வீட்டில் இருந்த காரை காவல்துறையினரும் நிதி நிறுவனத்தினரும் கடந்த சில மாதத்திற்கு முன்பு எடுத்துஸ்சென்று விட்டதாகவும், இது தொடர்பாக கீரைத்துறை காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்துள்ளேன். ஆனால், தொடர்ந்து இளங்கோ மற்றும் தினேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் 4 லட்சம் ரூபாய் வரைக்கும் பணத்தை வாங்கி கொடுத்த நிலையில், 50 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடத்தி உள்ளதாகவும், தற்போது பணம் அல்லது காரை கேட்டால் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறினார்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் முதல், காவல் நிலையம் வரை பலமுறை புகாரளித்தால் தற்போது வரை முதற்கட்ட தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தாலும், வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு கூட மாற்றாமல் தன்னை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய இளைஞர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/ePjoHReCyZhcBBdVB5x1.jpg)
முத்துகணேசன் தனது தந்தை சம்பாதித்து வைத்திருந்த கார் மற்றும் கார்களின் மதிப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தர காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
காரை சர்வீஸ் செய்து தருவதாகவும், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகிறேன் என கூறி 2 விலையுயர்ந்த சொகுசு காரை விற்பனை செய்து இளைஞரை மோசடி செய்து ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், இதனால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதோடு தனக்கான பணமும் கிடைக்காமல் தினசரி மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும், இதனால் தனது சகோதரனை பாதுகாக்க முடியாமல் உறவினர்கள் வளர்த்து வருவதாகவும் இளைஞர் முத்துகணேஷ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
செய்தி: அருண், மதுரை