/tamil-ie/media/media_files/uploads/2018/09/1-32.jpg)
DMK Senior Leader RS Bharathi arrested
Case Filed Against RS Bharathi : திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக எம்எல்ஏ கார்த்திக் உட்பட 7 பேர் மீது கோவை பேரூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case Filed Against DMK Senior Leader RS Bharathi for his Defamatory Speech Over TN CM: ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு
கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி கோவை பேரூர் பகுதியில், திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அரசு பதவி விலகக்கோரி கண்டனம் குரல்கள் எழுந்தன. இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர், பிராமணர்கள் பற்றியும்,முதல் அமைச்சர், அமைச்சர்களை அவதுறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக பேரூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் கோவை பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர், அளித்த புகாரின் அடிப்படையில், திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, திமுக நிர்வாகிகள் சேனாதிபதி, முத்துசாமி உட்பட 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.