சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
பெட்ரோல் குண்டு வீசியவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தப்போது, அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விசாரணையில், ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர் கதையானதால் மன உளைச்சல் அடைந்தேன். எனது மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட்’ தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான்? எனக் கேட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இதற்கு, கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர குற்றவாளி என்று காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கருக்கா வினோத் மீதான வழக்கு என்.ஐ.ஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இதனால் இந்த வழக்கில் மேலும் சில விவரங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“