Advertisment

நெருப்புடன் விளையாடுகிறீர்கள், மிகவும் தீவிரமான விவகாரம்: ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு, பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது மிகவும் தீவிரமான விவகாரம் என உச்ச நீதிமன்றம் கருத்து.

author-image
WebDesk
New Update
sadg

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி தமிழ்நாடு, பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராகவும்,  பஞ்சாப் அரசு ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்-க்கு  எதிராகவும்  மனுத் தாக்கல் செய்தனர். 

Advertisment

இந்த நிலையில், இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையில்,  மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினர். 

”கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
2020-ம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார். As Soon As Possible என்ற வாக்கியத்தை தமிழ்நாடு ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு தவறாக செயல்படுகிறார். எனவே, ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலக் கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,  தமிழ்நாடு சட்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய  மசோதக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்துள்ளார், அரசு ஆணைகளுக்கும்ஒப்புதல் அளிக்க வில்லை. இதனால் நிர்வாக சிக்கல் எழுந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான விவகாரம் என கருத்து தெரிவித்து இந்த வழக்கு தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ. 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தொடர்ந்து,  பஞ்சாப் அரசு தொடர்ந்த  ரிட் மனு விரணையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா? இது மிகவும் தீவிரமான விவகாரம் உச்ச நீதிமன்றம் கருத்து 

மேலும், நெருப்புடன் விளையாடுகிறீர்கள். மசோதக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்ககூடிய விவகாரம் என்று நீதிபதிகள் கூறினர். 

ஒரு வாரம் அவகாசம் அளியுங்கள். இந்த விவகாரத்திற்கு அரசியல் அமைப்பு சாசனத்தின் படி தீர்வு காண்கிறோம் என மத்திய அரசு வாதிட்ட நிலையில், 

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கும்,  சட்டப்பேரவை முடித்து வைக்காமல் இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை- பஞ்சாப் அரசுமத்திய அரசிடம் தீர்வு  உள்ளது என்றால் உச்ச நீதிமன்றத்தில் ஏன் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் என பஞ்சாப் அரசு எதிர் வாதத்தை முன்வைத்தது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Supreme Court Of India Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment