தமிழ் தேசிய முன்னணி செயலாளர் மீது தாக்குதல் : 3 தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் தேசிய முன்னணி கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், தமிழ் தேசிய முன்னானி கட்சியின் மாவட்ட செயலாளரை தாக்கியது தொடர்பாக மூன்று தீட்சிதர்கள் மீது சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ் தேசிய முன்னணி கட்சியில் கடலூர் மாவட்ட செயலாளராக இருப்பவர் வி.ஆர். பாலசுப்பிரமணியன். இவர் கடந்த புதன்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ‘அருத்ர தரிசனத்தின் போது ஆயிரம் தூண் மண்டபத்திற்கு முதன்மை கடவுள் நடராஜர் மற்றும் சிவகமசுந்தரி ஆகியோர் ஒரு பல்லக்கில் அழைத்துச் சென்றபோது ஆரத்தி எடுக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது ஏற்பட்ட மோதலில், அங்கிருந்த தீட்சிதர்கள் இவரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார், வர்தன் தீட்சிதர், முத்து தீட்சிதர் மற்றும் சோமு தீட்சிதர் ஆகியோர் மீது பிரிவு 147 (கலகத்திற்கு தண்டனை), 294 பி (பொதுஇடங்களில் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி வசைபாடுவது) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வி.ஆர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், தீட்சிதர்கள் மீது ஐபிசியின் 353 மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள  தமிழ் தேசியா முன்னானி கட்சியினர், இந்த சம்பவம் தொடர்பாக தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Case booked 3 dikshitars against attack on tamil desiya munnani secretary

Next Story
News Highlights: இங்கிலாந்துக்கு ஜன. 8 முதல் விமான சேவை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com