டாஸ்மாக் திறக்கும் அரசின் உத்தரவை எதிர்த்து பொதுநல வழக்கு – விரைவில் விசாரணை

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றச்சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என மனுவில் அச்சம்

By: May 5, 2020, 7:57:54 PM

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை வரும் 7 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மூன்றாவது முறையாக, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், கொரோனா முழுமையாக இல்லாத நிலை எட்டிய பிறகே டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், மதுபானக் கடைகள் முன் கூட்டம் கூடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுவை வாங்கி் சென்றுள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக விலகலை பின்பற்ற முடியாது எனவும், 40 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், மக்கள் வேலைக்கு செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றச்சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

100 ஏழை மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்!

மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மதுபானம் வாங்க பணம் கேட்டு பெண்களை துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணான வகையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Case file against govt order for open tasmac from may 7 covid 19 madras high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X