இந்து சமய அறநிலையத்துறை உதவியாளராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன். இவரின் மனைவி விஜயலட்சுமி.
இருவரும் காரில் சென்னை அசோக் நகரில் சென்றுகொண்டிருந்த போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேத்தி முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கே.எஸ் அழகிரியின் பேத்தியை கண்ணன் ஐஏஎஸ் கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கே.எஸ். அழகிரியின் பேத்தி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கூப்பிட்டு சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கே.எஸ். அழகிரி வந்துவிட்டார். தொடர்ந்து கண்ணன் ஐஏஎஸ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கண்ணன் ஐஏஎஸ், தலைமை செயலரை இன்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil