கோவை சூலூர் பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை நேற்று
பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதனிடைய 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் சிந்தாமணி புதூர் பகுதியில் மக்களை சந்தித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து அண்ணாமலை, காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பகுதியில் இருந்து கிளம்பிய அண்ணாமலை இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அண்ணாமலை தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தேர்தல் அதிகாரியின் புகாரின் போரில் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அண்ணாமலை தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,புகாரின் பேரில் 2 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“