scorecardresearch

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வீடியோ.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு!

உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி ஆபாசமாக பேசியது உறுதியானது.

karnan justice

முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய – அமெரிக்க பேச்சு வார்த்தை : பாகிஸ்தான் குறித்து தீவிர ஆலோசனை

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களைப் பற்றி முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் அவதூறாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இதுக்குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார்கள் வந்தன. விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வீடியோவை ஆய்வு செய்தபோது, அவர் உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி ஆபாசமாக பேசியது உறுதியானது.

இதனையடுத்து முன்னாள்‌ நீதிபதி கர்ணன் மீது, கலகம் செய்யும் நோக்கோடு செயல்படுதல், மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களின் கற்பு குறித்து இழிவாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸீரோ பேலன்ஸ் முதல் ஃப்ரீ செக் கலெக்‌ஷன் வரை… எஸ்.பி.ஐ-யில் BSBD கணக்கு சலுகைகள்

தமிழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன், மேற்கு வங்கத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கடந்த 2017-ம் ஆண்டு இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது
 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Case filed against justice karnan

Best of Express