கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு!

இந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு:

இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் மோகன் சி லாசரஸ் விமர்சித்ததாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வந்தது. இதனால், இந்து அமைப்பினரை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் கோபத்தில் இருந்தனர்.

இதையடுத்து பாஜக பிரமுகர் முருகேசன் என்பவர் கோயமுத்தூர் கருத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையத்தில், மோகன் எதிராக புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் இந்து கடவுள்களுக்கு எதிராக கருத்துக்களை பரவி வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பொள்ளாச்சி காவல்நிலையத்திலும் மோகன் எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார்காளை தொடர்ந்து அவர் மீது 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close