/tamil-ie/media/media_files/uploads/2018/04/dmk-alliance-leaders-cauvery-protest-edited.jpg)
cauvery Issue, Cauvery Management Board, Marina Protest, MK Stalin, TN Bandh
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று திமுக தலைமையில் தீவிர போராட்டங்கள் நடைபெற்றுது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவிற்குள் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. உரிய நடவிக்கை எடுக்காத மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடத்த ஸ்டாலின் தலைமையில் முழிவு எடுக்கப்பட்டது. இதற்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஏப் 1ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏப் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட தேதியில் (நேற்று) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் அண்ணாசாலை மற்றும் கடற்கரை சாலைகளிலும் தடையை மீறிய போராட்டத்தில் திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்த, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்குப் பாதிப்பு விளைவித்தல், தடையை மீறி போராட்டம் நடத்தியது, போக்குவரத்து செயல்பாட்டிற்கு இடையூறு செய்தது என ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.