டி.டி.வி. தினகரன் தனது புதிய இயக்கத்தின் பெயர் மற்றும் கொடியை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மதுரை மாவட்டம் மேலூரில், அமைப்பின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் விழா நேற்று காலை நடந்தது. பின்பு மேடையின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை ஏற்றினார்.
இந்த நிலையில், தினகரனின் கட்சிக் கொடியை பயன்படுத்த தடைகோரி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கொடியும், தினகரனின் கட்சி கொடியும் ஒரே மாதிரி உள்ளதால் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மனுவை சிவில் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
More Details Awaited…
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Case filed on ttv new party flag by admk