Advertisment

வளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு

தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
elephants, domesticated elephants status Case, domesticated elephants in tamilnadu, domesticated elephants, elephants, வளர்ப்பு யானைகள், தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் நிலை, demand form a committee headed by a retired judge, madras high court, சென்னை உயர் நீதிமன்றம், chenai high court, tamilnadu, tamilnadu elephants

தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய கடந்த 2016-ம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாக பராமரிக்கவில்லை என்றும் வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட கோரி ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கு வேறோரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை அந்த அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment