scorecardresearch

திருச்சியில் மது போதையில் பேருந்தை இயக்கியவர் மீது வழக்கு

திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

Trichy

அதன்பேரில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன், அருண்குமார், முகமதுமீரான், செந்தில் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போதையில் உள்ளரா என கண்டறியும் கருவி மூலம் சோதனையிட்டனர்.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று மொத்தம் 32 பேருந்துகள் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

செய்தி: க. சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Case on driver due to alcohol consumption