கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றியை சிலர் வேட்டையாடி பிடிப்பதாக.மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகள் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அங்கு சந்கேத்துக்கு இடமான முறையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
Advertisment
அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெட்டுக் கத்தியை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் ஜோஸ் என்பதும் மற்றொருவர் ஜான் பெர்லின் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு 4 வழக்குரைஞர்களும் உதவி செய்துள்ளனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்கள், நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோர் ஆவார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி
இதனை கண்டித்து நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலஜனாதிபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“