நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த வாரம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கட்சியில் உட்கட்டமைபை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. கட்சியில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக உட்கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என சுமார் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் த.வெ.க தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
விஜய்யின் உத்தரவுபடி, தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பொதுச் செயலாளர் ஆனந்த ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் கட்சி பொறுப்புகளுக்கு பணம் பெறப்படுகிறது என செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இது விஜய்யின் கவனத்திற்கு சென்ற நிலையில், கட்சி நிர்வாகிகள் பொறுப்பிற்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளளார்.
மாவட்ட செயலாளர்கள் நியமனம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக, இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் பட்டியலை விஜய் வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதேநேரம் மாவட்ட பொறுப்பாளர்களை அமைப்பதற்கான பணியிலும் தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தவெகவில் மாவட்ட அளவிலான பொறுப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணம் வசூலிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தது.
குறிப்பாக, விழுப்புரம் நகர தலைவர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்பதை போன்ற வாட்ஸ் அப் குரூப் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பனையூரில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ‘யாராக இருந்தாலும் சரி தெளிவாக சொல்கிறேன், பதவிக்கு யாராவது பணம் வாங்கினார்கள் என்று சொன்னால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.
கட்சியில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக உட்கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என சுமார் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் த.வெ.க தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
விஜய்யின் உத்தரவுபடி, தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பொதுச் செயலாளர் ஆனந்த ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் கட்சி பொறுப்புகளுக்கு பணம் பெறப்படுகிறது என செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இது விஜய்யின் கவனத்திற்கு சென்ற நிலையில், கட்சி நிர்வாகிகள் பொறுப்பிற்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளளார்.
மாவட்ட செயலாளர்கள் நியமனம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் பட்டியலை விஜய் வெளியிடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.