Advertisment

அரிசிக்கு பதிலாக பணம் - புதுவை துணைநிலை ஆளுநர் உத்தரவு செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு

துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் நேரடி பணப்பட்டுவாடா சட்டவிதிகளை ஏற்று விதிகளை வகுத்த புதுச்சேரி அரசு, தற்போது அதை மீறி செயல்பட முடியாது என வாதிட்டிருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cash transfer over free rice puducherry madras high court

cash transfer over free rice puducherry madras high court

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

ஹாய் கைய்ஸ் : குழந்தைகளுக்கு சூட்டுங்கள் தூய தமிழ்ப்பெயர்களை...

இந்த உத்தரவை ஏற்று, புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் விசாரித்தார். விசாரணையின் போது, முதல்வர் நாராயணசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைச்சரவை தீர்மானத்தை மீறி, துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டிருந்தது.

மேலும் துணைநிலை ஆளுநரின் உத்தரவு குறித்து, மத்திய உணவு துறை அமைச்சரிடம் விவரங்கள் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதால், துணைநிலை ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டிருந்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கை தாக்கல் செய்ய முதல்வருக்கு அடிப்படை உரிமையில்லை எனவும், யூனியன் பிரதேச சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசின் உத்தரவுக்கு யூனியன் பிரதேச அரசு கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிட்டிருந்தார்.

இன்றைய தமிழக முக்கிய செய்திகள் குறித்த அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

மேலும், யூனியன் பிரசதேசத்தின் முதல்வர், மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உரிமையில்லை எனவும், மக்கள் அரிசிக்கு பதிலாக பணத்தை பெறுவதை தடுக்கும் உள் நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதேபோல, துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் நேரடி பணப்பட்டுவாடா சட்டவிதிகளை ஏற்று விதிகளை வகுத்த புதுச்சேரி அரசு, தற்போது அதை மீறி செயல்பட முடியாது என வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment