scorecardresearch

ரூ.44 லட்சத்தை வங்கியில் இருந்து திருடிய கேஷியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

விழுப்புரத்தில், வங்கியிலிருந்து ரூ. 44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமானார். இந்நிலையில் நேற்று இரவு தனிப்படை காவல்துறை இவரை கைது செய்தது. விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி

விழுப்புரத்தில், வங்கியிலிருந்து ரூ. 44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமானார். இந்நிலையில் நேற்று இரவு  தனிப்படை காவல்துறை இவரை கைது செய்தது.  விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

சிந்தாமணி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணிபுரிகிறார், முகேஷ், இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு வந்திருக்கிறார். வங்கி லாக்கரில் இருந்து ரூ. 44 லட்சம் பணத்தை எடுத்த கொண்டு, அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றிருக்கிறார்.

அதிக நேரம் ஆகியும் அவர் வங்கிக்கு வரவில்லை என்பதால், வங்கியின் மேலாளர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் இவருக்கும் பதிலாக வேறு ஒருவர் வேலை செய்யும்போது, லாக்கரில் பணம் இல்லாதது தெரிய வருகிறது. மறுபடியும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த தகவலும் இல்லை.

இநிந்லையில் இது தொடர்பாக வங்கியின் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முகேஷை கண்டுபிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது மொபைல் எண்ணின் டவரை பின் தொடர்ந்து, நேற்று இரவு விழுப்புரத்தில் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் வங்கியிலிருந்து எடுத்தப்பணத்தில் ரூ. 3 ஆயிரம் மட்டுமே செலவு செய்ததாக அவர் விசாரணையில் கூறினார். மேலும் ரூ. 44 லட்சத்தை காவல்துறையினர் பரிமுதல் செய்தனர். சமீபகாலமாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அவர் அதிக பணத்தை அதற்கு செலவு செய்துள்ளார். மேலும் இந்த பணத்தையும் அதற்காகத் தான் திருடியுள்ளார் என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் செல்போனுடன், வங்கிக் கணக்கை இணைக்காத முதியவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துதாகவும் அவர் கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cashier of indian bank took rupess 44 lakhs and he was arrested