தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மின்னணு சான்றிதழ்கள் மிக அதிக அளவில் வழங்கப்பட்டு உள்ளன. சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெற வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில் விரைவான சேவையை அளித்திடும் வகையில் மின் ஆளுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய தகவல் மையத்தின் தொழில் நுட்ப உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு வழங்கும் சான்றிதழ்கள் ஹார்ட் காபி மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இதை மாற்ற உள்ளதாக தேர்தலுக்கு பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அரசு துறைகள் முழுக்க கணினிமயமாக்கப்பட்டன. எல்லாம் டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டன. இதன் மூலம் அறங்காவல் துறை தகவல்கள் கூட டிஜிட்டலாக மாற்றப்பட்டன.
அந்த வகையில், வருவாய் துறையிலும் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 கோடி ஆவணங்கள் ஒரு வருடத்திற்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 12,733 பொது சேவை மையங்கள் e-Distrct (Common Service Centres) வாயிலாக 25 வகையான சான்றுகள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு மின்னணு சான்றிதழ்கள் வழங்குவதில், மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“