தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் கேட்டர்பில்லர் நிறுவனம் இடையே ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின் இதுவரை சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“