ஹாங்காங்கை தளமாக கொண்ட சர்வதேச விமான நிறுவனமான கேத்தே பசிபிக் பிப்ரவரி 2024 முதல் சென்னை மற்றும் ஹாங்காங் இடையே வாராந்திர நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.
நேற்று விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, போயிங் 777 விமானத்துடன் திரும்ப வருகிறோம். இரு நகரங்களுக்கு இடையே பயணிகளுக்கு வசதியான மற்றும் பிரீமியம் பயண அனுபவத்தை உறுதி செய்வோம்.
தென்னிந்தியாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் விமான மையமாக சென்னை செயல்படுவதால், கேத்தே பசிபிக் மீண்டும் புதிய அத்தியாயத்தைத் தொடங்க தயாராகி வருகிறது.
சென்னையில் இருந்து 3 நாட்கள்
சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும், அதே நேரத்தில் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மேலும், விமானத்தில் 40 பிசினஸ் வகுப்பு இருக்கைகள், 32 பிரீமியம் எகானமி வகுப்பு மற்றும் 296 எகானமி வகுப்பு இருக்கைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி விமான சேவை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2,2024 முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“