Advertisment

காவிரி விவகாரத்தில் இனி சர்ச்சைகள் தொடர்வதை விரும்பவில்லை - உச்சநீதிமன்றம்

கர்நாட்காவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என தமிழகத்தில் போராட்டம் நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி விவகாரத்தில் இனி சர்ச்சைகள் தொடர்வதை விரும்பவில்லை - உச்சநீதிமன்றம்

தமிழகம் முழுவதும் காவிரி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்குப் பூட்டுப் போட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

காவிரி நதி நீர் பிரச்னையில் சுப்ரிம் கோர்ட் பிப்ரவரி 16ம் தேதி இறுதி தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பில் 6 வார காலத்துக்குள் காவிரி நீர் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் வகையில் திட்டத்தை (ஸ்கீம்) வகுத்து செயல்பட வேண்டும் என கூறியிருந்தது.

சுப்ரிம் கோர்ட் கொடுத்த 6 மாத கெடு என்பது கடந்த மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. கர்நாட்காவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என தமிழக அரசியல் கட்சிகள் கொதித்து எழுந்துள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், காவிரி மீட்பு நடையபயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை நடத்தக் கூடாது என சில அமைப்புகள் போர் கொடி தூக்கின. அதையும் மீறி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதையடுத்து போட்டை நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி போராட்டம் தொடர்பாக நடைபெறு போராட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள LIVE UPDATEட்டுடன் இணைந்திருங்கள்.

ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசினேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மாலை 04.00 - காவிரி விவகாரத்தில் இனிமேலும் சர்ச்சைகள் தொடர்வதை விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

பிற்பகல் 01.30 - தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையைச் சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, "நாங்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் ஐபிஎல் கிரிக்கெட்டை சென்னையில் நடத்துகிறார்கள். ஆனால், அதையும் எதிர்ப்பது தார்மீக கடமை. ஆகையால், இன்று மாலை 5.30 மணிக்கு அண்ணா நகரில் உள்ள அண்ணா சிலை அருகே கூடுவோம். ஆனால், அங்கு எந்த மாதிரியான போராட்டம் நடத்தப் போகிறோம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டோம்" என்றார்.

பிற்பகல் 01.15 - காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டை மாணவர்கள் தன்னிச்சையாக முற்றுகையிட்டு வாகனங்களிடம் சுங்கவரி வசூல் செய்யாமல் அனுப்பு வைத்தனர்.

publive-image

பகல் 12.45 -  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே தினகரன் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம். அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் கோரி இளைஞர்கள் என்.எல்.சி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நெய்வேலியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

publive-image என்.எல்.சி முற்றுகை போராட்டம்

publive-image

பகல் 12.30 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ள ஏழு நாட்களில் போக்குவரத்து மாற்றத்தை காவல்துறை அறிவித்துள்ளது.

பகல் 12.15 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை. இன்று இரவு போட்டி நடக்கவுள்ள நிலையில், பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பகல் 11.15 - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர், விட்டோரியா சாலையில் உள்ள கிரிக்கெட் மைதான நுழைவு வாயில் முன்பு வந்து கோஷம் எழுப்பினர். வாயிலுக்கு பூட்டுப் போட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காலை 10.30 - ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசினேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Ipl 2018 Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment