காவிரி விவகாரம் : பதவியை ராஜினாமா செய்யும் அதிமுக எம்.பி!

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரிம் கோர்ட் பிப்ரவரி 16ம் தேதி அறிவித்தது. ஆறு வாரங்களில் வாரியத்தை அறிவிக்க வேண்டும் என்று கோர்ட் சொன்ன கெடு மார்ச் 29ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் முத்துக்கருப்பன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

“காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன். வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றமில்லை. காவிரி விஷயத்தை மோடி, அமித் ஷா இருவரிடமும் வலியுறுத்தினேன். காவிரிக்காகப் போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது பதவி எதற்கு?. எம்.பி. என்ற முறையில் என்னால் இயன்றவரைப் போராடினேன். எனது முடிவு குறித்து சக எம்.பி-க்களுடன் பேசுவேன். எனினும் கட்சித் தலைமை கோரினால் ராஜினாமா முடிவு குறித்து ஆலோசிப்பேன்” என்றார்.

×Close
×Close