காவிரி போராட்டத்தில் விபரீதம் : ரயில் என்ஜினில் ஏறிய பாமக நிர்வாகியை மின்சாரம் தாக்கியது

காவிரி போராட்டத்தில் ரயில் மீது ஏறிய பாமக நிர்வாகி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

By: Updated: April 11, 2018, 01:57:26 PM

காவிரி போராட்டத்தில் ரயில் மீது ஏறிய பாமக நிர்வாகி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் ஆகியன நடைபெற்று வருகின்றன.

காவிரி போராட்டத்தின் ஒரு பகுதியாக திண்டிவனம் ரயில் நிலையத்தில் பா.ம.க.வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தியபோது, நகர இளைஞரணி துணைச் செயலாளர் ரஞ்சித் மற்றும் ஒருவர் ரயில் என்ஜின் மீது ஏறி முழக்கங்கள் எழுப்பினர்.

ரயில் என்ஜின் கூரையில் நடந்து சென்ற போது ரஞ்சித்தின் கை உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி குபீரென தீப்பிடித்தது. அதே வேகத்தில் நடைமேடையில் தூக்கி வீசப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தது பாமக.வினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cauvery issue bandh rail roko pmk office bearer electric shock

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X