Advertisment

‘காவிரி மேலாண்மை வாரியம்’ என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவே இல்லையா?

காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவே இல்லையா? கர்நாடகா மற்றும் மத்திய நீர்வளத்துறையின் அபாண்டமான புழுகு இது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu latest news

Tamil nadu latest news

காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவே இல்லையா? கர்நாடகா மற்றும் மத்திய நீர்வளத்துறையின் அபாண்டமான புழுகு இது!

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழ்நாட்டில் போராட்டங்களாக வெடித்திருக்கிறது. பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறவில்லை. ஸ்கீம்(செயல் திட்டம்) என்கிற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என கர்நாடகா அரசும் மத்திய நீர்வளத்துறையும் சாதிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் என கூறப்படாவிட்டாலும், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை (நீரின் அளவை மட்டும் 14 டி.எம்.சி குறைத்து) உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் விதித்த 6 வாரம் கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாததால், தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆயத்தமாகிறது. தவிர, அதிமுக, திமுக, பாமக ஆகியன தனித்தனியாக போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசும், அதிமுக.வும் இந்தப் பிரச்னையை கையாள்வதில் ரொம்பவே தடுமாறுவது கண்கூடாகத் தெரிகிறது. காரணம், இந்த விஷயத்தில் பாஜக.வையும் மத்திய அரசையும் வலுவாக எதிர்க்கும் நிலையில் அவை இல்லை. ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரதம் (தற்போது ஏப்ரல் 3-க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது) என அறிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய அரசை கண்டிப்பதாககூட வாசகம் இல்லை.

அது போகட்டும்! காவிரி பிரச்னையில் பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்கிற வார்த்தைகளே இல்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவில் இருந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் வரை பல முறை சொல்லியாயிற்று! இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ இதுவரை தெளிவான பதிலை கூறவில்லை.

ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்கிற வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதுதான் நிஜம்! தீர்ப்பின் ‘உள்ளடக்கம்’ முதல் பகுதியில் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அதில் 4-ம் பக்கத்தில், 'Mechanism (Cauvery Management Board) for implementation of tribunal's decissions' என கூறப்பட்டிருக்கிறது.

இதனை விவரித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் 355-வது பக்கத்திலும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி உத்தரவில் கூறப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதாகவே இதைப் பார்க்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவில், ‘Cauvery Management Board May be Constituted by the central Government' என கூறப்பட்டிருந்தது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்டு மத்திய அரசு, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி நடுவர் மன்றம் உறுதியாக உத்தரவிடவில்லை. மத்திய அரசு விரும்பினால் அமைக்கலாம்’ என வாதாடியது. ஆனால் அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

தவிர, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வழங்கிய உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவில், ‘காவிரி நடுவர் மன்ற உத்தரவு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணையானது’ என பக்கம் 455-ல் கூறப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் இறுதிப் பகுதியில் ‘ஸ்கீம்’ என கூறப்பட்டிருந்தாலும், அது காவிரி மேலாண்மை வாரியத்தையே குறிக்கும் என்பதற்கு மேற்சொன்னவை போதுமான ஆதாரங்கள்!

இவற்றை தமிழ்நாடு அரசு முறையாக வெளிப்படுத்தி பதிலடி கொடுத்திருந்தால், அகில இந்திய அளவில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஆதரவு கூடியிருக்கும். கர்நாடகாவின் அண்டப் புழுகுக்கு ஒத்தூதாமல், மத்திய நீர்வளத்துறையை தடுத்திருக்கலாம். தமிழ்நாடு அரசு எப்போது தைரியம் பெறப் போகிறது?

 

Supreme Court Of India Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment