காவிரி திட்ட வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

காவிரி வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார். உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும் என யு.பி.சிங் கூறினார்.

காவிரி வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,

காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவில் இருவர் முழு நேர உறுப்பினர்கள், இருவர் பகுதி நேர உறுப்பினர்களாகவும், மாநிலத்துக்கு ஒருவர் எனவும் இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு உறுப்பினர்கள் கொண்டதாக என மொத்தம் 10 உறுப்பினர்கள் இதில் இடம் பெறுவார்கள்.

மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்.

குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர்.

10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.

10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இது இருக்கும் என வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

×Close
×Close