Cauvery Issue : டெல்லியை தலைமையிடமாக கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைபடி, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி நீர் மேலான்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்போது, செப்டம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை எனக் காரணம் காட்டி கர்நாடக அரசு நீர் திறப்பை நிறுத்தியது. தொடர்ந்து, கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் 15 நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“