காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடர்பான 2-வது குழுவின் பயணத் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை அரியலூரில் இருந்து இந்தக் குழு புறப்படுகிறது.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இரு குழுக்களாக நடத்த திமுக தலைமையில் கடந்த 6-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி முக்கொம்பில் இருந்து முதல் குழு மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது. 2-வது குழு பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கிறது.
காவிரி உரிமை மீட்புப் பயணம், 2-வது குழுவின் பயணத் திட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தெரிவித்த செய்திக் குறிப்பு வருமாறு :
காவிரி உரிமையை மீட்க திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இரண்டு பயணங்கள் புறப்படுகின்றன. ஒன்று முக்கொம்பிலிருந்து புறப்படுகிறது. மற்றொன்று 9.4.2018ல் அரியலூரில் இருந்து புறப்படுகிறது.
அரியலூரில் இருந்து புறப்படும் பயண விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
பயணத் திட்டம் : 09.4.2018 முதல் 13.04.2018 வரை
09.4.2018 : மாலை 4.00 மணி - அரியலூர் பொதுக்கூட்டம்,
மாலை 6.30 மணி - பயணத் தொடக்கம், இரவு - 9.00 மணி -இரவு உணவு மற்றும் தங்கல் அரியலூர்.
10.04.2018 : காலை 7.00 மணி-அரியலூரில் சிற்றுண்டி, காலை 8.00 மணி -கீழப்பழுர், காலை 10.00 மணி- திருமானூர், காலை 11.30 மணி-திருவையாறு, பகல் 1.30 மணி - ஐயம்பேட்டை (மதிய உணவு), மாலை 4.00 மணி - பாபநாசம், மாலை 7.30 மணி - கும்பகோணம் நகரம், இரவு - கும்பகோணம் தங்கல்
11.04.2018 : காலை 7.00 மணி - சிற்றுண்டி, காலை 8.00 மணி - கும்பகோணத்திலிருந்து புறப்படுதல், காலை 9.00 மணி - திருபுவனம், காலை 10.00 மணி - திருவிடைமருதூர், காலை 10.30 மணி - ஆடுதுறை, காலை 11.30 மணி - குத்தாலம், மதியம் 1.30 மணி - மயிலாடுதுறை (மதிய உணவு), (நாகை மாவட்டம்), மதியம் 3.00 மணி - மயிலாடுதுறையிலிருந்து புறப்படுதல், மாலை 4.00 மணி - தலைஞாயிறு, மாலை 4.30 மணி - மணல்மேடு, மாலை 6.00 மணி - முட்டம் (கடலூர் மாவட்டம்), இரவு 7.00 மணி - காட்டுமன்னார்குடி,
இரவு தங்கல் - காட்டுமன்னார்குடி
12.04.2018 : காலை 7.00 மணி - சிற்றுண்டி, காலை 8.00 மணி - காட்டுமன்னார்குடியிலிருந்து புறப்படுதல், காலை 9.00 மணி - லால்பேட்டை, காலை 10.00 மணி - குமராட்சி, காலை 11.00 மணி - சிதம்பரம், மதியம் - சிதம்பரம் (மதிய உணவு)
முக்கொம்பிலிருந்து வரும் பயணக்குழுவுடன் இணைந்து கடலூர் செல்வது. இவ்வாறு பயணத் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.