காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு 2018 பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில், மத்திய அரசு கூட தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் முழு அதிகாரமும் அதன் தலைவருக்கே உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 2,162 ஆக அதிகரிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்.
காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்.
இதுதொடர்பாக வெளியிட்ட அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும்.
எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ</strong>
மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது.
நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பாஜக அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகமாக இணைத்து இருப்பது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிரந்தரமாக பறித்துக்கொள்ளும் பாஜக மத்திய அரசின் துரோகச் செயலாகும்.
தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ பணியாளர்களுக்கு முழு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? – பதிலளிக்க அரசுக்கு அவகாசம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்</strong>
ஓர் அமைச்சகத்தின் கீழ் காவிரி நதி நீர்ப்பகிர்வு விவகாரத்தைக் கொண்டுபோவது, இந்தப் பிரச்னையைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
பொதுப்பணித்துறை விளக்கம்
இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையின் கீழ், மத்திய அரசு கொண்டு வந்ததால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜல்சக்தி ஆணையத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்தது ஒரு நிர்வாக நடவடிக்கை ஆகும். காவிரி நீர் ஆணையம் முறைப்படுத்தும் குழு நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது என விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”