/indian-express-tamil/media/media_files/Iac9FjyGdbxsLVsBLdBu.jpg)
50 வருடங்களுக்குப் பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் 2 ஆண் புலிகள் தென்பட்டதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்பிரியா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு 2 புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள 2 ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக் காப்பாளர் கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
Excellent news for Tiger lovers from Tamil Nadu. Two Tigers were recorded in camera traps nearly after 50 years gap in the Reserve Forests of Jawalagiri in the Cauvery North Wildlife Sanctuary at Hosur, Tamil Nadu.Jawalagiri is adjacent to the recently notified Cauvery South… pic.twitter.com/iB2zcaKgDL
— Supriya Sahu IAS (@supriyasahuias) February 2, 2024
ஜுவாலகிரி காப்புக் காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024-ல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த 2 புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டியுள்ள, தொடர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.