ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: உச்ச நீதிமன்றத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு ‘செக்’

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீது, புகார்தாரர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் இருந்து 3 கோடி ரூபாய் பெற்று, பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துபாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துபாண்டியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கில் தனது தரப்பு கருத்தை கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவித்து, புகார்தாரர் விஜய் நல்லதம்பி சார்பில் வக்கீல் பி.சோமசுந்தரம் உச்ச நீதிமன்றத்தில் ’கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Caveat petition filed against former minister rajendra balaji case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com