Advertisment

30 ஆண்டுகள் பணி; கனகராஜ் செய்த காரியம்: மனம் திறந்த ஜெயலலிதா கார் டிரைவர்!

கொடநாடு கொலை வழக்கு விசாரணை அய்யப்பனிடம் நிறைவு பெற்றது. இதுகுறித்த பேசிய அவர், கனகராஜ் சக ஓட்டுநர்களுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Kodanad murder and robbery case

கனகராஜ் தொடர்பான கேள்விகளை சிபிசிஐடி போலீசார்  கேட்டதாகவும் அவர் குறித்து தெரிந்த தகவல்களை தான் தெரிவித்ததாகவும் அய்யப்பன் கூறினார்.

Kodanad murder case | CBCID police interrogated Jayalalithaas car driver: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக, கோவை பி.ஆர்.எஸ் (PRS) மைதானத்தில்  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம்  விசாரணை நடைபெற்றது.  

மாலை சுமார் 6 மணியளவில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அய்யப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர், “கனகராஜ் தொடர்பான கேள்விகளை சிபிசிஐடி போலீசார்  கேட்டதாகவும் அவர் குறித்து தெரிந்த தகவல்களை தான் தெரிவித்ததாகவும் கூறினார். 

Advertisment

குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், சுபாவம்  தொடர்பாக கேட்டனர் என்றார். 3 சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணையில் இருந்ததாகவும் இவர்கள் புதியவர்கள் எனவும் "ஆண்டுகள் தான் கனகராஜ் டிரைவராக  இருந்தார் என தெரிவித்த அய்யப்பன், ஜெயலலிதாவிடம் 6-7 ஓட்டுநர்கள் இருந்தோம், ஜெயலலிதாவிற்கு என்னைத் தவிர கண்ணன் என்ற ஓட்டுநரும் இருந்தார் என்றார்.

மேலும், கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை, அலுவலக வேலையை பார்த்து கொண்டிருந்தார் என கூறிய அவர், இரவு நேரங்களில்  அவர் இருப்பார் என்றார்.

ஓட்டுநர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது, ஜெயலலிதாவிற்கு அது பிடிக்காது என்றார்.

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கொடநாடு எஸ்டேட் சென்றுள்ளேன். ஆனால் தங்களுக்கு(ஓட்டுநர்கள்)  பங்களாவிற்குள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. தனிப்பட்ட முறையில் யாரும்  செல்ல முடியாது.

ஜெயலலிதாவை பங்களா வாசல் படிக்கட்டில் விட்டு விட்டு வந்து விடுவோம். ஓட்டுநர் கனகராஜ் எங்கள் எல்லாருக்கும் சங்கடத்தை கொடுத்துவிட்டார்.

கனகராஜ் வேலையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இன்று சிபிசிஐடி விசாரணை திருப்திகரமாக இருந்தது. எழுத்துப்பூர்வமாகவும்  வாக்குமூலம்  பெறப்பட்டது.

ஓட்டுநர் கனகராஜ் முறையாக பணி செய்யவில்லை என்பதால் அவர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 2021 மே மாதம் சொந்த காரணங்களால் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினேன். தற்போது எந்த பணியிலும் இல்லை. 30 ஆண்டுகள போயஸ் கார்டனில்  பணியாற்றி உள்ளேன்” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kodanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment