புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 147 சாட்சிகளிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் வேங்கை வயல் மற்றும் இறையூர் கிராமங்களில் உள்ள சாட்சிகளிடம் போலீசார் இன்று (மே2) விசாரணை நடத்தினர்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“