அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டு, எம்.ஆர். விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், அவரை உடனிருந்து கவனித்து கொள்ள வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் மனுவோடு, முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான வாதங்கள் நேற்று நடைபெற்றது. அப்போது, இடைக்கால முன்ஜாமீன் தேவையில்லை. முன்ஜாமீன் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீட்டுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கூலி நாயக்கனூர் கிராமத்தில் யுவராஜ் என்பவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி ஈஸ்வரமூர்த்தி மற்றும் ரகு ஆகியோர் வீடுகளில் நில மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை தேடிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.