CBES Board Violates Tamil Nadu RTE Quota : குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Right of Children to Free and Compulsory Education (RTE) Act எனப்படும் இந்த உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான சேர்க்கையினை ஏப்ரல் 22ம் தேதி ஆன்லைன் மூலம் துவங்கியது தமிழ்நாடு அரசு.
ஏப்ரல் 22ம் தேதி துவங்கி மே 18ம் தேதி வரையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டது மெட்ரிக் கல்வி இயக்குநரகம்.
இந்த 25% இடஒதுக்கீடு சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், எச்.ஐ.வி தொற்றினால் அவதிப்படும் பெற்றோர்களின் குழந்தைகள், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆனாலும் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மத்திய பாடத்திட்டத்தினை செயல்படுத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் பெயர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இடம் பெறவில்லை. தங்களுக்கு அருகே இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பெயர்கள் அதில் இடம் பெறாததால் பெற்றோர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : பெற்றோர்களே உஷார் : இந்த பள்ளிகளில் மறந்தும் உங்கள் குழந்தைகளை சேத்துறாதீங்க!!!
அரசு உதவி பெறாத சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்ற போதிலும், சி.பி.எஸ்.சி பள்ளிகள் பிப்ரவரி முதல் மார்ச் மாத காலத்திற்குள் தங்களின் மாணவர் சேர்க்கையினை முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை கொடுத்த பிறகும் கூட அதை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மெட்ரிக் இயக்குநரகத்திற்கு தங்களின் கடிதங்களையும் விபரங்களையும் அளித்துள்ளனர். அதன்படி இந்த பள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Cbes board violates tamil nadu rte quota and stayed away from rte admissions
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை