Advertisment

கலாஷேத்ராவின் முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை கலாஷேத்ராவில் ஆடிட்டோரியம் கட்டியதில் பயனற்ற செலவு செய்ததாக சங்கீத நாடக அகாடமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leela samson, leela samson cbi, former Chairperson of Sangeet Natak Akademi Leela Samson, Bharatnatyam dancer leela samson, லீலா சாம்சன், சங்கீத நாடக அகாடமி, கலாஷேத்ரா, லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு, kalakshetra foundation, chennai news

leela samson, leela samson cbi, former Chairperson of Sangeet Natak Akademi Leela Samson, Bharatnatyam dancer leela samson, லீலா சாம்சன், சங்கீத நாடக அகாடமி, கலாஷேத்ரா, லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு, kalakshetra foundation, chennai news

சென்னை கலாஷேத்ராவில் ஆடிட்டோரியம் கட்டியதில் பயனற்ற செலவு செய்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisment

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

இந்தியாவின் கலாச்சார தலைநகர் என்று தமிழகத்தின் தலைநகர் சென்னை அழைக்கப்படுகிறது. பாரம்பரிய செவ்வியல் இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், நுண்கலை கலைஞர்கள் பலரும் அதனாலேயே சென்னையில் தங்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படி, சென்னை உலக அளவில் கலாச்சார தலைநகரம் என்று அடையாளப்படுத்துவதில் கலாஷேத்ராவுக்கு முக்கிய பங்கு உண்டு.

இத்தகைய,சென்னை கலாஷேத்ரா நிறுவனத்தில் கூத்தம்பலம் ஆடிட்டோரியத்தை புதுப்பித்ததற்காக ரூ.7.02 கோடி பயனற்ற செலவு செய்ததாக பரதநாட்டிய கலைஞரும் சங்கீத நாடக அகாடமியின் முன்னாள் தலைவருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் முன்னாள் தலைவருமான லீலா சாம்சன், அப்போது நிறுவனத்தில் பணிபுரிந்த தலைமை கணக்கு அலுவலர் டி.எஸ்.மூர்த்தி, கணக்கு அலுவலர் எஸ்.ராமச்சந்திரன், பொறியியல் அதிகாரி வி.சீனிவாசன் மற்றும் கலை செயல்பாட்டுக்கான மைய (சி.ஏ.ஆர்.டி) உரிமையாளர் மற்றும் சென்னை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது நிதி விதிகளை மீறி புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அறக்கட்டளை அதிகாரிகள் ஆலோசகர் கட்டிடக் கலைஞர் சி.ஏ.ஆர்.டி.-க்கு வழங்கியதாக கலாச்சார அமைச்சின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment