Advertisment

பங்குச்சந்தை முறைகேடு; சென்னையில் முன்னாள் அதிகாரியிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை

சென்னையில் முன்னாள் பங்குச்சந்தை அதிகாரியிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை; வீட்டிலிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது சிபிஐ

author-image
WebDesk
New Update
CBI

சிபிஐ அலுவலகம்

CBI enquires Ex-NSE official in Chennai for 3 days: மும்பையில் உள்ள மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) குழு, தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடுகள் குறித்து, பங்குச் சந்தையின் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனிடம் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் 3 நாட்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

Advertisment

மும்பையில் இருந்து வந்த சிபிஐ குழுவினர் ஆனந்த் சுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மற்றொரு சிபிஐ குழுவினர் மும்பையில் உள்ள என்எஸ்இ அலுவலகத்தில் சோதனை நடத்தி டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் உள்ளிட்ட சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

சிபிஐ குழு சென்னையில் சோதனை நடத்தியபோது, ​​தேவைப்படும்போது விசாரணைக்கு வரவழைக்கப்படலாம் என்பதால், ஆனந்த் சுப்பிரமணியன் தனது வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால், சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ஆனந்த் சுப்ரமணியனைக் கேட்டுக் கொண்டனர். விசாரணை செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்: ‘கோட்சேவின் சித்தாந்த பேத்தி’ வெற்றி: சென்னையில் கால் பதித்த பா.ஜ.க

கடந்த வாரம், மும்பை என்எஸ்இயின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவருக்கு முன் தலைமை பொறுப்பில் இருந்த ரவி நரேன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதுதில்லியில் விசாரணை நடத்தினர். சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) படி, சித்ரா ராமகிருஷ்ணா ஆனந்த் சுப்ரமணியனை தலைமை வியூக ஆலோசகராக நியமித்ததுடன், இமயமலையில் உள்ள 'யோகி' ஒருவரின் அறிவுறுத்தலின்படி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஒரு பெரிய சம்பள தொகுப்புடன் NSE இன் குழு இயக்க அதிகாரியாக (GOO) பதவி உயர்வு அளித்தார்.

‘யோகி’க்கு ‘ரகசியமான’ தகவல்களை அனுப்ப சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னஞ்சலையும் சிபிஐ மீட்டெடுத்தது. அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 ஆம் ஆண்டு என்எஸ்இயில் இருந்து சித்ரா ராமகிருஷ்ணா ராஜினாமா செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) சமர்ப்பித்த 192 பக்க அறிக்கையின் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது. செபியின் பிப்ரவரி 11 உத்தரவின் அடிப்படையில், சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன் மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் எந்தவொரு சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களுடனும் (MII) அல்லது செபியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு இடைத்தரகருடனும் தொடர்புகொள்வதில் இருந்து தடைசெய்யப்பட்டனர். சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ₹3 கோடி அபராதம் விதித்ததுடன், ​​செபியானது NSE யிடம் சித்ரா ராமகிருஷ்ணாவின் அதிகப்படியான விடுப்பு பணமான ₹1.54 கோடியையும், ஒத்திவைக்கப்பட்ட போனஸ் ₹2.83 கோடியையும் விடுவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது.

சித்ரா ராமகிருஷ்ணாவின் மும்பை மற்றும் சென்னை வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல் ஆனந்த் சுப்ரமணியன் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Nse Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment