/indian-express-tamil/media/media_files/2025/11/02/image-screen-grab-2-2025-11-02-19-07-08.jpg)
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். Photograph: (Image Source: @PTI_News/X)
கடந்த அக்டோபர் 27-ம் தேதி, கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சித் தரப்பினரும், த.வெ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி பல்வேறு ஐயங்களை எழுப்பிய நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் வேலுசாமிபுரத்துக்கு சென்று, அங்கே 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீளம், அகலம் ஆகியவை கருவி மூலம் அளவீடு செய்து சுமார் 9 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, வேலுசாமிபுரத்தில் உள்ள மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மனில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், பலர் கரூர் பயணியர் மாளிகையில் ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் அன்று விஜய் பிரசாரத்துக்கு எப்போது வந்தார், கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டடு என கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.
இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தும் சி.பி.ஐ அதிகாரிகள் திங்கள்கிழமை (03.11.2025) பனையூர் த.வெ.க அலுவலகத்தில் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக, சி.பி.ஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பனையூர் செல்ல உள்ளதாகவும் அங்கே த.வெ.க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us