Advertisment

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ மீண்டும் சோதனை

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கு; கார்த்தி சிதம்பரம் எம்.பி-யின் சென்னை இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை

author-image
WebDesk
Jul 09, 2022 18:12 IST
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

CBI raid at Karthi Chidambaram Chennai house: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் சென்னை இல்லத்தில் சி.பி.ஐ மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.

Advertisment

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.,யாக இருந்து வருகிறார்.

இவரது சென்னை இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விசா வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை இல்லத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மே மாதம் சோதனை நடத்தியப்போது, இந்த பீரோ உள்ள அறை பூட்டியிருந்ததால், தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment