2019 தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு; தமிழகத்தில் பல இடங்களில் சிபிஐ சோதனை

2019 மக்களவைத் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் அளித்தது தொடர்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

2019 மக்களவைத் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் அளித்தது தொடர்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த் எம்.பி.யாக உள்ளார்.

இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ இந்த வழக்கு விசாரணையை மாநில காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை வருமானவரித் துறை மற்றும் மாநில போலீசார் விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbi searches in tn in cash for votes case during 2019 elections

Next Story
விஜயகாந்த் விரைவில் நலம்பெற அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்துdmdk leader vijayakanth, vijayakanth tests covid-19 positive, vijayakanth coronavirus positive, தேமுதிக, விஜயகாந்த், விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று, முதல்வர் பழனிசாமி, vijayakanth to recovery from covid-19 leaders wishes, cm edappadi k palaniswami, dmk mk stalin, vaiko, ரஜினிகாந்த், rajinikanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com