சாத்தான்குளம் லாக்கப்பில் மரணமடைந்த வணிகர்கள் தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே 5 பேரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதினார்.
கல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன?
இந்த மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரிக்க முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சாத்தான்குளம் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சிபிஐ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”